Wednesday, February 24, 2010

SOME APPEALS FROM THE STUDENTS

மாணவர் கோரிக்கைகளில் ஒன்று....

அஸ்ஸலாமு அலைக்கும்
எமது தாருல் கைர் நூலகத்தை பயன்படுத்தி வருகின்ற மாணவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருகின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியை அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.


இந்த வகையில் மாணவர்களிடமிருந்து தத்தம் தேவைக்கேற்ப பல்வேறு வேண்டுகோள்களையும் எம்மால் அவதானிக்க முடிகிறது.



எமக்கு நூலக புத்தகங்கள் தொடர்பாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையை தங்கள் பார்வைக்காக தருகிறோம்

ஆர்வமுள்ள சகோதர சகோதரிகள் எமக்கு உதவ முன் வரலாம்..  

http://www.4shared.com/file/228794088/d2ac0628/1111_004.html
http://www.4shared.com/file/228793581/306c44de/1111_005.html

Saturday, February 20, 2010

JAFFNA PAPERS WITH ANSWER

Dear all
assalamu alaikum
We hereby publish another useful exam paper with answers.please send us your comments further more.it will very helpful to do better in  our service
.thank you
http://www.scribd.com/doc/27154453/chemistry-paper-jaffna

ANSWERS ARE IN THE FOLLOWING LINK:
www.scribd.com/doc/27154451/chemistry-jaffna

Wednesday, February 10, 2010

AN OPEN LETTER FOR PARENTS AND WELL WISHERS

தாருல் கைர் இளைஞர் முன்னணி


ஜாமிஆ கடைத்தொகுதி

காத்தான்குடி



அன்பின் சகோதர சகோதரிகளே மற்றும் பெற்றோர்களே

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

(எமது தாருல் கைர் இளைஞர் முன்னணியினால் க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கென வழங்கப்படுகின்ற சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு தங்களது மகன்ஃமகள் விண்ணப்பித்துள்ளார் என்பதனை மிகவும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.)

தாருல் கைர் இளைஞர் முன்னணியானது பல்கலைக்கழக மாணவர்களால் கடந்த மூன்று வருட காலமாக க.பொ.த. உயர்தர மாணவர்களுக்கென பின்வரும் குறிப்பிடத்தக்க சேவைகளை ஆற்றி வருகிறது.

1. ஜாமிஆ கட்டடத்தொகுதியில் இயங்கிவரும் கற்பதற்கான வசதிகள் கொண்ட நூலகம்


எமது இலவச நூலக சேவைகள்More...


• ஆண் மாணவர்களுக்கு இரவு வேளைகளிலும் கற்பதற்கு வசதியான படிப்பறை

• மாணவிகளுக்கென பிரத்தியேக நேரசூசியில் படிப்பறை வசதிகள்

• பல்கலைக்கழக அனுமதி பெற்ற புதிய மாணவர்களினால் பாட வகுப்புக்கள்

• முன்னணி கல்வியாளர்களின் சிறப்புக்கருத்தரங்குகள்

• பல்கலைக்கழக விண்ணப்ப விடயங்கள் மற்றும் எதிர்கால கற்கை நெறி தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்குதல்


2. வாராந்தம் பாட அலகுகளை உள்ளடக்கிய பரீட்சைகள் மற்றும் பொதுவான முன்னோடி பரீட்சைகளை நடாத்துதல். அவற்றுக்கான விளக்க வகுப்புக்களை ஏற்பாடு செய்தல்.


மிகவும் வெற்றிகரமாக மாணவர்களின் அடைவுகள் மதிப்பிடப்படுவது மாத்திரமின்றி பாடசாலைக்கும் புள்ளி விபரங்கள் தொடர்பாக அறிவுறுத்தப்படுகிறது.


3. செயலமர்வுகள் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்தல்.

க.பொ.த. சாதாரணதர உயர்தர மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்குகள் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் முன்னணி ஆசிரியர்கள்இ பொறியியலாளர்கள் இகல்வியாளர்களைக் கொண்டு செய்தல்.


4. கணனி விளக்க வகுப்புக்களை உயர்தரம் முடித்த மாணவர்களுக்கு ஏற்பாடு செய்தல்.


5. ஆங்கில பயிற்சி வகுப்புக்களை ஏற்பாடு செய்தல்.
எனப்பல்வேறு சேவைகளை இலவசமாக வழங்கி வந்துள்ளோம்.


எனினும் அண்மைக்கால பொருளாதார நெருக்கடிகள் மற்றும் வளங்கள் பற்றாக்குறை போன்ற காரணங்களினால் எமது சேவைகளைத் தொடருவதில் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளோம்.



எமது உடனடித்தேவைகள்

மாணவர்களுக்குத்தேவையான மேலதிக புத்தகங்கள் இகைநூல்கள்.
• தளபாட வசதிகள்.

• மாதாந்த வாடகைக்கொடுப்பனவுகள் மற்றும் பராமரிப்பாளருக்கான கொடுப்பனவுகள்.

• பரீட்சை தொடர்பான செலவினங்கள்.



மாணவர்களின் கல்விவளர்ச்சிக்காக பல சிரமங்களைத்தாண்டி எம்மால் மேற்கொள்ளப்படுகின்ற சேவைகளைத்தொடருவதற்கு தங்களது ஒத்துழைப்புக்களை வழங்குவதுடன் மேற்குறிப்பட்ட எமது தேவைகளை நிறைவு செய்வதற்கு தங்களாலான உதவிகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.


நன்றி.


இவ்வண்ணம்

நிருவாகம்

தாருல்கைர் இளைஞர் முன்னணி.

email: dharulkhair@yahoo.com
Our Bankers: Amana Bank limited.kattankudy. A/C: 44787

உயிரியல் வினாத்தாள்

அஸ்ஸலாமுஅலைக்கும்.
 வாராந்தம் எம்மால் உயர்தர மாணவர்களுக்கென நடாத்தப்படும் முன்மாதிரி பரீட்சை உயிரியல்2010 இங்கே பிரசுரமாகிறது.
எமக்கு தொடர்ந்தும் ஊக்கமளிக்கும் அனைவருக்கும் நன்றிகள்.
இங்கே கிளிக் செய்து பெறலாம்.
http://www.scribd.com/doc/26661382/dharulkhair-weekly-exam-series-11-biology-for-2010-batch
 (kalaham Font used)